உங்கள் மேற்கத்திய ஜாதகத்துக்கான PDF
முழுமையான மேற்கத்திய ஜாதக அறிக்கை
உங்கள் இயல்பையும் உணர்வுகளின் போக்கையும் மேற்கத்திய ஜாதகம் எப்படி விளக்குகிறது என்று பாருங்கள். கிரகங்களுக்கு இடையிலான தொடர்புகளும் விளக்கப்படும்.
₹999
ஒருமுறை கட்டணம் · ஆங்கில PDF · பதிவிறக்க இணைப்பு மின்னஞ்சலில் வரும், அறிக்கை உங்கள் கணக்கிலும் இருக்கும்
முழுமையான மேற்கத்திய ஜாதக அறிக்கை வாங்கஅறிக்கையில் என்ன உண்டு?
- உங்கள் பிறப்பு ஜாதகச் சக்கரம்
சாயன ஜாதகத்தில் கிரகங்கள் எந்தப் பாகையில், எந்தப் பாவத்தில் உள்ளன என்று தெரியும். கணக்கிட முடிந்தால் முக்கியக் கோணங்களையும் பார்க்கலாம்.
- இயல்பும் உணர்வுகளும்
ஜாதக விளக்கத்தில் பொருந்தும்போது சூரியன், சந்திரன், இலக்கினம், சந்திரனின் நிலை (வளர்பிறை, தேய்பிறை போன்றவை) பற்றிப் படியுங்கள்.
- கிரகங்களும் பாவ அதிபதிகளும்
ஒவ்வொரு கிரகமும் எந்த இராசியில், எந்தப் பாவத்தில் இருக்கிறது என்று தெரியும். பாவ அதிபதிகள் வழியாகத் தொடர்புகள் அமைந்தால் அதற்கும் விளக்கம் உண்டு.
- கிரகப் பார்வைகளும் வக்கிர நிலைகளும்
கிரகங்கள் எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்று பாருங்கள். பொருந்தும்போது, அவை இருக்கும் இராசியில் அவற்றின் தகுதிநிலை மற்றும் வக்கிரம் குறித்த குறிப்புகளும் உண்டு.
- ஜாதகத்தின் ஒட்டுமொத்த அமைப்பு
பொருந்தும்போது ஜாதகச் சக்கரத்தின் வடிவம், நெருப்பு, நிலம், காற்று, நீர் ஆகியவற்றின் சமநிலை, சந்திரன் சுற்றும் பாதையின் இரு சந்திப்புப் புள்ளிகள் ஆகியவையும் விளக்கப்படும்.
- மரபுவழிப் பரிந்துரைகள்
உங்கள் ஜாதகத்துக்கு ஏற்ற ருத்ராட்சம் பற்றி அறிக்கையில் பரிந்துரை இருந்தால், அதை இங்கே காணலாம்.
எப்படி வாங்குவது?
- பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் தொடர்பு விவரங்களையும் கட்டண விவரங்களையும் உள்ளிடுங்கள்.
- கட்டணம் செலுத்தும் பக்கத்தில் விலையைப் பாருங்கள். பிறகு பணம் செலுத்துங்கள்.
- வாங்கும்போது கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்குப் பாதுகாப்பான பதிவிறக்க இணைப்பை அனுப்புவோம். அதன் வழியாக PDF-ஐப் பதிவிறக்கலாம்.
பொதுவான கேள்விகள்
எந்த வகை ஜாதகம் கிடைக்கும்?
உங்கள் பிறப்பு ஜாதகத்தை மேற்கத்திய சாயன முறையில் விளக்குகிறது. கணக்கிடப் பயன்படுத்திய பாவ முறை ஜாதகப் பக்கத்தில் இருக்கும்.
சரியான பிறந்த நேரம் தெரியாவிட்டாலும் அறிக்கை வாங்கலாமா?
வாங்கலாம். ‘பிறந்த நேரம் தெரியாது’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், பிறந்த இடத்தின் நண்பகல் நேரத்தைப் பயன்படுத்துவோம். இலக்கினம், முக்கியக் கோணங்கள், பாவங்கள், பிறந்த நேரத்தைச் சார்ந்த பிற முடிவுகள் தோராயமாக இருக்கும்.
என்ன கிடைக்கும்?
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் கிரக நிலைகளையும் கிரகங்களுக்கு இடையிலான தொடர்புகளையும் விளக்கும் ஆங்கில PDF கிடைக்கும்.
மீண்டும் பதிவிறக்க முடியுமா?
முடியும். வாங்கும்போது கொடுத்த மின்னஞ்சல் முகவரியுடன் உள்நுழைந்து, அறிக்கைகள் பகுதிக்குச் செல்லுங்கள். 365 நாட்களுக்கு உங்கள் அறிக்கை கிடைக்கும்.
முறையாகக் கிடைத்த அறிக்கைகளுக்குப் பொதுவாகப் பணம் திருப்பித் தரப்படுவதில்லை. அறிக்கை கிடைக்காவிட்டால், அதில் வேறொருவரின் ஜாதகம் இருந்தால் அல்லது PDF-ஐத் திறக்க முடியாவிட்டால், பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கை பகுதியில் பணத்தைத் திரும்பப் பெறத் தகுதி உண்டா, எப்படிக் கோருவது என்பதைப் பாருங்கள்.